கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மதத் தீவிரவாதிகள் அல்ல - போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் ; பாதுகாப்பு செயலாளர்கடந்தவாரத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட (ஐ.எஸ். ஐ.எஸ் உடன் தொடர்புடைய குற்றத்தில்) இலங்கையர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன Kamal Gunaratne தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "கைது செய்யப்பட்ட நால்வரும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். மேலும், அவர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை.


அதேவேளை, அவர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவர்கள் பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிடுவது சரியான தீர்மானமாக இருக்காது" என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தியாவிடம் இருந்து கிடைத்த உளவுத்துறையின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

“எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் விழிப்புடன் உள்ளோம் என பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்னால் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது” என்று குணரத்ன கூறினார்.
கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மதத் தீவிரவாதிகள் அல்ல - போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் ; பாதுகாப்பு செயலாளர் கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மதத் தீவிரவாதிகள் அல்ல - போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் ;  பாதுகாப்பு செயலாளர் Reviewed by Madawala News on June 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.