நேற்றைய எரிபொருள் விலை குறைப்பு பஸ் கட்டணத்தையோ அல்லது முச்சக்கர வண்டி கட்டணத்தையோ குறைக்க போதுமானதாக இல்லைஎன அறிவிக்கப்பட்டதுஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) நேற்று மாலை அறிவித்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு போக்குவரத்து சேவை வழங்குநர்கள் பதில் வழங்கி உள்ளார்கள் .

இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 16 குறைக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அண்மைய திருத்தம் பஸ் கட்டணத்தையோ அல்லது முச்சக்கர வண்டி கட்டணத்தையோ குறைக்க போதுமானதாக இல்லை என போக்குவரத்து சேவை வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.


பஸ் கட்டணத்தை குறைக்க இந்த திருத்தம் போதுமானதாக இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


"எனினும், அரசாங்கம் உத்தேச பயண அட்டை முறையை அமல்படுத்தினால், நாங்கள் உடனடியாக பேருந்து கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளோம்," என்று அவர் கூறினார்.


 இதேவேளை, அனைத்து இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் (AITWDU) தலைவர் லலித் தர்மசேகர, பெற்றோல் விலை திருத்தமானது முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு கட்டணத்தை குறைக்கும் திறனை வழங்காது எனவும், அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.  
நேற்றைய எரிபொருள் விலை குறைப்பு பஸ் கட்டணத்தையோ அல்லது முச்சக்கர வண்டி கட்டணத்தையோ குறைக்க போதுமானதாக இல்லைஎன அறிவிக்கப்பட்டது நேற்றைய எரிபொருள் விலை குறைப்பு பஸ் கட்டணத்தையோ அல்லது முச்சக்கர வண்டி கட்டணத்தையோ குறைக்க போதுமானதாக இல்லைஎன அறிவிக்கப்பட்டது Reviewed by Madawala News on June 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.