சில மாவட்ட பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படும்.



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (ஜூன் 04) மற்றும் புதன்கிழமை (ஜூன் 05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் மற்றும் ஹோமாகம வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (4) மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

நாடளாவிய ரீதியில் நிலவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது
சில மாவட்ட பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படும். சில மாவட்ட பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படும். Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.