இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 இலங்கையர்கள் கைது.



தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர்.


கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.


குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில் இந்தியாவின்  பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர்.


இந்நிலையிலே குறித்த 5 பேரும் படகு மூலம் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த நிலையில் திங்கட்கிழமை(3) காலை தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :
இலங்கையை சேர்ந்தவர்கள் என்றாலும்  வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடவுச்சீட்டு இல்லாமல் திருட்டுத் தனமாக கடல் மார்க்கமாக / ஆகாய மார்க்கமாக இலங்கைக்குள் நுழைய முடியாது.
அவ்வாறு நுழைந்தால் அது சட்ட விரோதம். 
அவர்கள்  கைது செய்யப் படுவர்.


இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 இலங்கையர்கள் கைது. இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த  5 இலங்கையர்கள் கைது. Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.