தைபா அரபுக் கல்லூரியில் ஐவருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு ; மூவருக்கு 3A(அஸ்லம் எஸ்.மெளலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 05 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கல்லூரி அதிபர் மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இக்கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்.

இவர்களுள் 03 மாணவிகள் 3ஏ அதி சிறப்பு சித்திகளை பெற்றுள்ளதுடன் 05 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இதுவரை 40 இற்கு மேற்பட்ட மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ளனர் என்பதுடன் பல மாணவிகள் பட்டப் படிப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர் என்று அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்
தைபா அரபுக் கல்லூரியில் ஐவருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு ; மூவருக்கு 3A தைபா அரபுக் கல்லூரியில் ஐவருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு ;  மூவருக்கு 3A Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.