இன்றும் பலத்த மழைக்கே வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது.



நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.


கடல் பிராந்தியங்களில் 

****************************


புத்தளம்  தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம்  வரையான   கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 ‐ 65 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 


காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


கல்பிட்டி தொடக்கம்  கொழும்பு, காலி,ஹம்பாந்தோட்டை  ஊடாக பொத்துவில்  வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப்பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. 


ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.

இன்றும் பலத்த மழைக்கே வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது. இன்றும் பலத்த மழைக்கே  வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தது. Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.