சுமார் 2 இலட்சம் பெறுமதியான மொபைல் தொலைபேசியை 30,000 ரூபாய்க்கு வாங்கியவர் கைது.சுமார் 2 இலட்சம் பெறுமதியான மொபைல் தொலைபேசியை  30,000 ரூபாய்க்கு வாங்கியவர் கைது.

 யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியொன்றை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


கடந்த வாரம்,  யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட 1 90,000 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார் .


சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் கண்காணிப்பு கேமராவின் காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் மானிப்பாய் சாவல்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .


அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேக நபர் தொலைபேசியை 

 30,000 ரூபாய் பணத்திற்கு  ஆறுகால்மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது .


பின்னர் கையடக்கத் தொலைபேசியை வாங்கியவரும் கைது செய்து  தொலைபேசி மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொலைபேசியை திருடிய நபர் சைக்கிள் திருட்டுகளில் ஆறுமாதகாலம் தண்டனை பெற்று விடுதலையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

சுமார் 2 இலட்சம் பெறுமதியான மொபைல் தொலைபேசியை 30,000 ரூபாய்க்கு வாங்கியவர் கைது. சுமார் 2 இலட்சம் பெறுமதியான மொபைல் தொலைபேசியை  30,000 ரூபாய்க்கு வாங்கியவர் கைது. Reviewed by Madawala News on June 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.