காணாமல் போயிருந்த பரீதா என்ற பெண், 16 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து மீட்புஇந்தோனேசியாவின் தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் 45 வயதான பரிதா என்ற பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காணாமல் போய் தேடப்பட்டு வந்த
தாய் ஒருவரே 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பினால் விழுங்கப்பட்டு இறந்து கிடந்தார்.

2017 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் மலைப்பாம்பு விழுங்கிய ஐந்தாவது நபர் இவராகும் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவரை தேடிக் கொண்டிருக்கையில் அவரது கணவர், குறிப்பிட்ட பெண்ணின் உடைமைகளை கண்டுபிடித்தார்...

இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் கிராம மக்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது அவர்கள் பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்றைக் கண்டனர்,"

உடனடியாக குறிப்பிட்ட மலைப்பாம்பின் வயிற்றை வெட்டிப் பார்த்தபோது காணாமல் போயிருந்த பரிதா என்ற அந்தப் பெண் பாம்பின் வயிற்றுக்குள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.


காணாமல் போயிருந்த பரீதா என்ற பெண், 16 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு காணாமல் போயிருந்த பரீதா என்ற பெண், 16 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு Reviewed by Madawala News on June 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.