நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 740 பேர் கைது!நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 740 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 34 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 6 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 146 கிராம் ஹெரோயின்,202 கிராம் ஐஸ்,203 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 740 பேர் கைது! நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 740 பேர் கைது! Reviewed by Madawala News on June 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.