பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மல்வானைக்கு திடீர் விஜயம்.மல்வானை பகுதி உட்பட அப்பிரதேசத்தின் பல பகுதகளில் தீடிர் வெள்ளம் வருவதனை கட்டுப்படுத்தும், மல்வானை மாபிடிகம் நீரணையில் பாரிய வெடிப்புகள் இரண்டு விழுந்துள்ளமை தொடர்பில் சமூக ஊடகங்களில் செய்தி போட்டோக்களுடன் வெளியாகியிருந்தது.

பாரிய உயிர்ச்சேதங்களையும், சொத்துக்கள் சேதங்களையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அரசியல் மட்டங்களில் உள்ள பலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே வெடிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மல்வானை மாபிடிகம நீரணையை பார்வையிட்டு அது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து

இந்த ஆபத்தான் வெடிப்புக்களை உடனே புணர்நிர்மாணம் செய்து உடனடி தீர்வு வாங்கிக்கொடுக்கும் முகமாகவே

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் 08/06/2024 சனிக்கிழமை மாலை மல்வானைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த நீரணைக்கு பொறுப்பான நீர்ப்பாசன அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் இஸ்தலத்துக்கு வந்திருந்தனர்.

நீரணையை முழுமையாக பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அதிகாரிகளும் குறித்த வெடிப்புக்களை உடனடியாக புணரமைத்து தருவதாக ஊர் மக்களுக்கு உறுதியளித்தனர்.

குறித்த மல்வானை மாபிடிகம் நீரணை நூறுவருடம் தாண்டி பழமையானது என்றும்.

இது ஆரம்பகாலத்தில் சிறுவெள்ளங்களை கட்டுபடுத்தவே பயன்பட்டது எனவும்

இப்போது ஏற்படும் தீடீர் வெள்ளங்களை இந்த சிறிய நீரணையால் கட்டுப்படுத்த முடியாது ஆகவே இந்த நீரணைக்கு பதிலாக இன்றைய கால தேவைக்கு தகுந்தாற் போல் பெரிய வெள்ளங்களை கட்டுப்டுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய

பெரிய நீரணை அமைக்கப்பட்டால் தான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என அங்கிருந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்ஹேரத் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் மல்வானை மாபிடிகம் நீரணைக்கு ஏதேனும் சேதம் ஏற்படும் நிலையில் கிட்டத்தட்ட 6 கிலோ மீற்றருக்கும் விட தூரமாக நீண்டிருக்கும் இந்த நீரணைக்கு அண்மையில் வசிக்கும் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நீரணையால் அதிகம் பாதிக்கப்படும் நீரணையுடனேயே உள்ள மல்வானையின் இரண்டு பகுதிகளான காந்தியவளவ்வ மற்றும் ஆட்டோ மாவத்தை பகுதிகளில்

இந்த முறை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் ஆரம்ப கட்டமாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் காந்தியவள பகுதிக்கு 10,045,000 சேதமும், ஆட்டோ மாவத்தை பகுதிக்கு 7,310,000 சேதமும் ஏற்பட்டிருந்ததாகவும் உண்மையான சேதம் இதனை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை வெள்ளத்தின் போதும் இதற்கு சமமான சேதத்தை சந்திக்க வேண்டியுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு குறித்த நீரணை பாரிய வெள்ளங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக நவீன முறையில் நிர்மாணம் செய்யப்பட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அனர்த்த முகாமை சபை மற்றும் பாராளுமன்றத்திலும் தாம் குரல் கொடுப்பதாகவும், இது பற்றிய கவனத்தை மேலிடங்களுக்கு கொண்டு செல்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் மல்வானை மக்களுக்கு உறுதியளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மல்வானைக்கு திடீர் விஜயம். பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மல்வானைக்கு திடீர் விஜயம். Reviewed by Madawala News on June 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.