ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் ; UNPஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,


“ஜனாதிபதியினதும் நாடாளுமன்றினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்பதுடன் அதுவே சரியான சந்தர்ப்பமாகும்.

எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு பிற்போட வேண்டும் எனவும்அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய கொடையாளர்களுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியது அனைத்து விடயங்களையும் விட முக்கியமானது.


மேலும், ஜனநாயக ரீதியில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு பதவியின் மீதுள்ள நாட்டம் காரணமாக அல்ல. பாராளுமன்ற வாக்கெடுப்புக்குச் சென்று மீண்டும் நாட்டை வீணாக்காதீர்கள்.


இரண்டையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பிரச்னைகளைத் தீர்த்து தேர்தலை நடத்தலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் ; UNP ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் ; UNP Reviewed by Madawala News on May 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.