தொழிநுட்பங்கள் அல்லாஹ்வின் அருட்கொடை - அந்த அருள்களை எமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்மனிதனின் செயற்பாடுகளை இலகு படுத்தும் தொழிநுட்பங்கள் அல்லாஹ்வின் அருள். அந்த அருள்களை புறக்கணிக்காதிருப்போம். ஸ்மார்ட் ஸ்கூல், ஸ்மார்ட் மஸ்ஜித், ஸ்மார்ட் மத்ரஸாவின் தேவை..


Smart phone, Smart Watch, Smart TV, Smart Car, Smart Security Camera, Smart Banking, Smart Farming, Smart Business, Smart Education, Smart Kitchen, Smart Toilet, Smart Home என்று எம்மைச் சுற்றியுள்ள அனைத்துமே Smart ஆக மாறிக்கொண்டே இருக்கும் போது நமது பள்ளிவாயில்களும், மத்ரஸாக்களும் Smart ஆக வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது.


மஸ்ஜித்களுக்கும், மத்ரஸாக்களுக்கும் வெளியே அனைத்தும் Smart ஆகி விட்டன. மத்ரஸாவிலிருந்து வெளியான பின் ஒரு குடும்பஸ்தர் தனதும், தனது பிள்ளைகளினதும், தனது குடும்பத்தினதும் தொழில் சார், கல்வி சார் மற்றும் சமூகம் சார்ந்த ஒட்டு மொத்த தினசரி பணிகளையும் புரிவதற்கு மேற்கூறியதை விடவும் இன்னும் பல Smart உபகரணங்களை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும் போது மத்ரஸா மாணவர்களுக்கு சிறு வயது முதல் இவற்றை முறையாக கற்றுக் கொடுக்க மறுக்கிறோம்.


சாதாரண ஒரு மனிதன் தினமும் ஒவ்வொரு தேவைக்குமுரிய App களை Download செய்வது, Documents களை Upload செய்வது, Edit, Convert, Translate, Bank Transfer, Fees Payment, Bill Payment, Email, Print போன்ற விடயங்களை செய்வது வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறி விட்டது. இன்று கதீப்மார்கள் Smart Phone, iPad, Tablet களிலேயே தமது குத்பா குறிப்புக்களை வைத்திருக்கிறார்கள். குத்பா பிரசங்கங்கள் Smart Phone களூடாக உடனுக்குடன் Internet மூலம் Social Media க்களில் LIVE Stream பகிறப்படுகின்றன. அதே சமயம் அவை Cloud Drive க்கு Upload செய்யப்பட்டு Save/ Backup பண்ணப்படுகின்றன.


இன்று வெளி நாடுகளில் சாதாரண ஒரு காரியாலய உத்தியோகம் (Data Entry) செய்வதற்கு ஆகக் குறைந்தது Computer, Laptop, Tablet, Windows, MS Office, WhatsApp, Twitter, Instagram, email, Printing ஆகியவற்றை உபயோகிக்கும் அறிவு தேவை. ஒரு வீட்டுச் சாரதியாக வேலை செய்யக்கூட Smart Phone, Whatsapp, GPS ஆகியவற்றை உபயோகிக்கும் அறிவு தேவை.


ஓரு மாணவனுக்கு சுமார் 17-18 வருடங்கள் வரை இவற்றைப் பற்றிய எந்த அறிவும் கொடுக்கப்படாமல் தூரமாக்கி வைக்கப்பட்டுவிட்டு பிறகு தொழில் தேடும் போது இவற்றை வலுக்கட்டாயமாக புகட்ட வேண்டிய நிலை ஒன்று இன்று காணப்படுகிறது. எமது இந்த காலவதியான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறந்த தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்வது சுலபம் இல்லை. தொழிநுட்பங்களைப் பற்றிய எதிர்ப்பு நிலை (Technophobia) மாறி தொழிநுட்பங்களை எமக்கு சாதகமானதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஹரீஸ் ஸாலிஹ்

தொழிநுட்பங்கள் அல்லாஹ்வின் அருட்கொடை - அந்த அருள்களை எமக்கு சாதகமாக்கிக் கொள்வோம்  தொழிநுட்பங்கள் அல்லாஹ்வின் அருட்கொடை - அந்த அருள்களை எமக்கு சாதகமாக்கிக் கொள்வோம் Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.