இணைய ஆபத்துக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நுட்பங்கள் - இலவச online செயலமர்வு*இணைய ஆபத்துக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நுட்பங்கள்* - *இலவச நிகழ்நிலை செயலமர்வு*

( இணைய பாதுகாப்பு இலவச நிகழ்நிலை செயலமர்வில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்.
-------------------------------------------------

குற்றம் என்றாலோ, குற்றவாளி என்றாலோ நமக்குத் தெரிந்தது நம்பியார் கெட்-அப்பிலோ அல்லது எண்பதுகளில் திரையில் தோன்றிய வில்லன்களின் அமைப்பிலோ அல்லது ஒரு வகையான பனியனில் ரொம்பப்பெருத்த ஒருவன் கத்தியைக்காட்டி மிரட்டுவதும், கபாலி வகையறா கற்பிதங்களுமாகவே இருக்கிறது. ஆனால், இன்றைய டிஜிட்டல் குற்றவாளிகள் பெரும்பாலும் பார்வைக்கு பக்கா ஜெண்டில்மேனாக தோற்றமளிப்பவர்கள்தான். கோட்சூட் மாட்டிக்கொண்டு, தலையை சீராக வாரி, பார்ப்பதற்கு “சார் ! என்று எழுந்து நிற்கவைக்கும் தோற்றம் கொண்ட சைபர் கிரிமினல்கள் இன்று அதிகரித்து வருவதால், அதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் அவசியம்.

சைபர் க்ரைம் (Cyber crime), சைபர் ஸ்டோக்கிங் (Cyber stalking), ஹேக்கிங் (Hacking), சைபர் போர்னோ (Cyber Phornography) என்று விரிந்து இன்று சைபர் வோரில் (Cyber war) வந்து நிற்கிறது இணையக்குற்றங்கள். மெதுவாக நடந்து திரிந்த இந்த இருண்ட பக்கங்கள் இன்று பரத நாட்டியம் ஆடிக்கொண்டே நம்மில் பலரை ஆட்கொண்டு விட்டது. இவை எதில் நாம் சிக்கிக்கொண்டாலும் எங்கோ ஓரிடத்தில் நமக்கான ஆபத்து காத்துக்கொண்டேயிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருப்பது ஒன்றே இந்த மாயை நிறைந்த இருண்ட உலகின் உக்கிரங்களில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி.

நீங்கள் யாருக்கும் எதுவுமே சொல்லவில்லை என்றாலும்கூட ஸ்பைவேர் (Spyware) போன்ற குறுக்குவழிகளில் உங்கள் மொத்த ஜாதகத்தையும் உருவக்கூடிய ஆபத்தும் இல்லாமலில்லை. எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

இவைகுறித்த இலவச நிகழ்நிலை செயலமர்வு ஒன்று Great Minds மற்றும் ILS அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெறும். முடியுமானவர்கள் கலந்து பயன்பெற முடியும்.

நன்றி.

Shibly Ahamed

@highlight Greatminds Services Fazlan A Cader Faslan Hashim #cybersecurity #cybersecurityawareness #cybersecuritychallenge #Cybercrime

🪀Follow This Link To Join Our WhatsApp Group :


🔗 𝗥𝗘𝗚𝗜𝗦𝗧𝗘𝗥 𝗡𝗢𝗪 :
Don't miss this chance to shape your future!

+94764997130
+94742823290
OR
https://wa.me/+94764997130 ,
+94742823290

𝗢𝗴𝗮𝗻𝗶𝘇𝗲𝗱 𝗕𝘆 :
GREAT MINDS - INSTITUTION FOR LIFE SKILLS
Reg No. PV00223839
__________________________________________
இணைய ஆபத்துக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நுட்பங்கள் - இலவச online செயலமர்வு இணைய ஆபத்துக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நுட்பங்கள்  -  இலவச online செயலமர்வு Reviewed by Madawala News on May 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.