இரண்டு சுதந்திரக்கட்சி முன்னாள் MP க்கள் மற்றும் ஒரு JVP உறுப்பினர் சஜித்துடன் இணைவுசமகி ஜன பலவேகய (SJB) நடாத்தும் “ஜன பவுர” நிகழ்ச்சியின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டத்தின் போது, ​​ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகியவற்றின் பிராந்திய அமைப்பாளர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து SJB கட்சியுடன் இணைந்து கொண்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நந்தசேன ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக எஸ்.ஜே.பி.யில் இணைந்துகொண்டார்.

1993 ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றிய இவர் 1994 ஆம் ஆண்டு பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு வர்த்தக பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.


அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளருமான திலக் மஹாலேகம்கே 1993 ஆம் ஆண்டு வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றிய பின்னர் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஏழு வருடங்கள் மின்னேரிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றினார் அவரும் SJB யில் இணைந்து கொண்டார்.


மேலும், பொலன்னறுவை மாநகர சபையின் பிந்துனுவெவ பிரிவுக்கு ஜே.வி.பி.யில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான எச்.சமந்த பண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் SJB யில் இணைந்தார்.
இரண்டு சுதந்திரக்கட்சி முன்னாள் MP க்கள் மற்றும் ஒரு JVP உறுப்பினர் சஜித்துடன் இணைவு இரண்டு சுதந்திரக்கட்சி முன்னாள் MP க்கள் மற்றும் ஒரு JVP உறுப்பினர் சஜித்துடன் இணைவு Reviewed by Madawala News on May 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.