மடவளை பஸார் A. J. அம்னா ஸீன் GS அரச சேவைக்கு தெரிவு.மடவளை பஸார் A. J. அம்னா ஸீன் GS அரச சேவைக்கு தெரிவு.

2024 ஆம் ஆண்டுக்கான அரச சேவைக்கு புதிய கிராம சேவகர் (GS) நியமனம்....

✅ A. J. AMNA ZEEN (New GS appointment) பாடசாலை வீதி, மடவளை பஸார். 

நேற்றைய தினம் 08-05-2024 அன்று அலரி மாளிகையில் (අරලියගහ මන්දිරය) கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன தலமையில் அரச பொது சேவைகள் திணைக்கள ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அவர்களும் கலந்துகொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான கிராம சேவகர் பதவிக்கு தேர்வான 1942 பேருக்கு புதிய நியமனம் வழங்கபட்டது. 

||பாததும்பர பிரதேச சபைக்கு உட்பட்ட கிராம சேவகர்களாக தெரிவான மூன்று பேர்களில் ஒருவராக மடவளை பஸாரைச் சேர்ந்த *A.J. அம்னா ஸீன் (GS) அவர்களும் தெரிவு செய்யப்பட்டு நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற நியமன நிகழ்வில் வைத்து கண்டி மாவட்ட செயலாளர் கௌரவ சந்தன தென்னகோன் (දිසාපති ගරු චන්දන තෙන්නකෝන් මහතා) இடமிருந்து தனது நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.|| 

2021 இல் கோரப்பட்ட *கிராம சேவகர் பதவிக்கான போட்டிப் பரீட்சை* விண்ணப்பங்கள் 2023 டிசம்பர் இல் தெரிவு நடந்துள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் கிராம சேவகர் (GS) போட்டி பரீட்சைக்கு சுமார் 1000 ம் பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்ததில் பாததும்பரையில் 6 பேர் மட்டுமே நேர்முக பரீட்சைக்கு தெரிவாகி அதில் மடவளைக்கு ஒருவராக 24 வயதுடைய *A.J. அம்னா ஸீன்* அண்மையில் நேர்முக பரீட்சையை முடித்த நிலையில் தற்போது *கிராமசேவகர் பதவிக்கு* தெரிவாகியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்! 

இவர் மடவளை பஸார் பாடசாலை வீதியை சேர்ந்த ஜனாப் ஜாலிக்கீன் என்கிற அஹ்மத் ஜான் மற்றும் ராயிஸா ஹானிம் (ஆசிரியை) தம்பதிகளின் மகளும் மடவளை மதீனா தேசீய பாடசாலையின் பழைய (2018 A/L) மாணவியுமாகும். 

இவருடைய மகத்தான சேவையை ஊருக்கும் பிரதேசத்திற்கும் நாட்டிற்கும் வழங்க அல்லாஹ் அருள்பாலிப்பானாக. 

✍️ தகவல்
Sulfi Sameen.
09-05-2024
மடவளை பஸார் A. J. அம்னா ஸீன் GS அரச சேவைக்கு தெரிவு. மடவளை பஸார் A. J. அம்னா ஸீன் GS அரச சேவைக்கு தெரிவு. Reviewed by Madawala News on May 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.