பாலமுனையின் அமைதியான ஆசிரிய ஆளுமை இன்று ஓய்வு பெறுகின்றது.பாலமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எனது அன்பிற்குரிய உடன் பிறந்த சகோதரரான இஸ்மாலெவ்வை முகம்மது சரீப் இன்று ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

பாலமுனையில் முதன் முதல் தரம் 5 ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவரும் பாலமுனையின் இரண்டாவது பட்டதாரியான இவர்
பட்டப்பின் கல்வி டிப்ளோமா,
ஊடகத்துறை டிப்ளோமா பட்டத்துடன் ஆசிரியப்பயிற்சியும் பெற்றவர்.
திறந்த பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் டிப்ளோமா பயிற்சி ஆசிரிய மேற்பார்வையாளராகவும் கடமையாற்றிவர்..

கல்விப்புலத்தில் பல உயர் பதவிகள் கிடைத்தும் அதனைப்பெறாமல் ஆசிரிய தொழிலையே செய்தவர்.
பாலமுனை அஷ்றப் வித்தியாலயம் ஆரம்பிக்கும் போது முன்னாள் ஆளுநர் அல்ஹாஜ் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் சேர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அதன் அதிபராக பொறுப்பேற்கச் சொன்னதையும் மறுத்தார். ஆசிரிய ஆலோசகராக நியமனம் கிடைக்க சந்தர்ப்பம் கிடைத்தும் அதனையும் ஏற்க மறுத்தார்.

1988 ஆசிரிய நியமனத்தில் இருந்து இன்று வரை தனது உன்னத தொழிலான ஆசிரிய தொழிலையே ஓய்வு பெறும் வரை செய்து மாணவர்களின் கல்விக்கு நேரடியாக பங்களிப்பு செய்துள்ளார்.

பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம், ஒல்லிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயம்,
காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயம்,
பாலமுனை அஷ்றப் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றிய இவர்
பாலமுனை அலிகார் மகா வித்தியாலயம் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப்பாடசாலையின் ஆகியவற்றின் பழைய மாணவருமாவார்.
இவருக்கு மூன்று மகன்களில் இருவர் பட்டதாரிகளாகவும் ஒருவர் க.பொ.த உயர்தரம் எழுதியும் உள்ளார்.

அவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைந்து நல்ல சுகத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

ஐ.எம்.இப்றாஹிம்
(ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்.)
அன்பிற்குரிய உடன் பிறந்த சகோதரர்.
பாலமுனையின் அமைதியான ஆசிரிய ஆளுமை இன்று ஓய்வு பெறுகின்றது. பாலமுனையின் அமைதியான ஆசிரிய ஆளுமை இன்று ஓய்வு பெறுகின்றது. Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.