சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்து கொண்ட நபர் ஜே.வி.பி உறுப்பினரே அல்ல ; அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்புபொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார் என்ற கூற்றை தேசிய மக்கள் சக்தி இன்று மறுத்துள்ளது.

குறிப்பிட்ட நபர் ஜே.வி.பி உறுப்பினர் அல்ல, ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மன்னாரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய திஸாநாயக்க, குறிப்பிட்ட நபர் பொலன்னறுவை மாநகர சபையின் பெண்டிவெவ பிரதேசத்தில் போட்டியிடுவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பித்த ஹிதிஹாமிலகே சமன் குமார என்ற, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் எனத் தெரிவித்தார்.

"பொலன்னறுவையில் நடைபெற்ற SJB பேரணியில் NPP இன் உறுப்பினர் ஒருவர் SJB இல் இணைந்தார் என்று SJB இன்று மகிழ்ச்சியுடன் கூறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இது இன்று தொலைக்காட்சியில் பெரிய செய்தியை உருவாக்கும். SJB தலைவர்கள் அனைவரும் அவரை மகிழ்ச்சியுடன் அரவணைத்தனர் . அவர் யார் என்று எனக்குத் தெரியும். அவர் ஹிதிஹாமிலகே. பொலன்னறுவை மாநகரசபையின் பெண்டிவெவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை சமர்ப்பித்த சமன் குமார.

இவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்றவே முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்தார்
சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்து கொண்ட நபர் ஜே.வி.பி உறுப்பினரே அல்ல ; அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்து கொண்ட நபர் ஜே.வி.பி உறுப்பினரே அல்ல ; அனுரகுமார திஸாநாயக்க தெரிவிப்பு Reviewed by Madawala News on May 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.