இரண்டு தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிக்க முயற்சித்த நபரை தேடும் பொலிசார் இரண்டு தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காகப் போலி ஆவணங்களைக் கொடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவி கோரியுள்ளனர்.


ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


சந்தேக நபர் நீர்கொழும்பு , வெல்லவீதிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 071 859 4915 அல்லது 011 239 5371 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 


இரண்டு தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிக்க முயற்சித்த நபரை தேடும் பொலிசார் இரண்டு தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிக்க முயற்சித்த நபரை தேடும் பொலிசார் Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.