"ரஃபா" தாக்குதல் நிறுத்தப்பட "குனூத்துன் நாஸிலா" வில் பிரார்த்திப்போம் - ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள்"ரஃபா" தாக்குதல் நிறுத்தப்பட "குனூத்துன் நாஸிலா" வில் பிரார்த்திப்போம் - ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள்

( ஐ. ஏ. காதிர் கான் )

பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்களாக, தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அங்குள்ள "ரஃபா" எனும் பகுதியில் கொடூரமான தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது.
இத்தாக்குதலில், அப்பாவி முஸ்லிம்களில் பலர் உயிரிழந்தும், பெரும்பாலானோர் காயமுற்றும் வருகின்றனர். இதில், அதிகமான குழந்தைகளும் பெண்களும் அடங்குகின்றனர்.
எனவே, அப்பகுதியில் இடம் பெற்று வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படுவதற்கும், அமைதி சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும், அனைத்து மஸ்ஜித்களிலும் "பஜ்ர்" தொழுகையில் ஓதி வரக்கூடிய குனூத்தை, ஏனைய தொழுகைகளின் போதும் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் ஒரு மாத காலத்திற்கு ஓதி வருமாறும், அதில் பின் வரும் துஆக்களைச் சேரத்துக் கொள்ளுமாறும் அனைத்து மஸ்ஜித்களுடைய இமாம்களையும், அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
   மேலும், இந்த சங்கையான மாதத்தில் "தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா" மற்றும் "இஸ்திஃபார்" போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி, துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும், அனைத்து முஸ்லிம்களையும் ஜம் - இய்யத்துல் உலமா சார்பில், அதன் தலைவர் "முஃப்தி" எம்.ஐ.எம். ரிழ்வி மற்றும் ஃபத்வாக்குழு செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*குனூத்துடன் சேர்த்து ஓதும் துஆக்கள் பின் வருமாறு :

اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ


اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ


اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ


اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ


اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ
"ரஃபா" தாக்குதல் நிறுத்தப்பட "குனூத்துன் நாஸிலா" வில் பிரார்த்திப்போம் - ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள் "ரஃபா" தாக்குதல் நிறுத்தப்பட "குனூத்துன் நாஸிலா" வில் பிரார்த்திப்போம் - ஜம் இய்யத்துல் உலமா வேண்டுகோள் Reviewed by Madawala News on May 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.