மத்ரசாவில் கற்கும் மாணவன் மசூட் அஸ்மட்டை காணவில்லை, தந்தை பொலிஸில் முறைப்பாடுஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் உள்ள மசூட் அஸ்மட் வயது(15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த மாணவன் அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கற்கும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 16.5 2024 ந் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


குறித்த மாணவன் அறபு மத்ரசாவில் இருந்து 10.05.2024 அன்று ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்த நிலையில் 16.05.2024 அன்று காணாமல் போயுள்ளதாகவும் 18.05.2024 ந் திகதி அன்று தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் மொறவெவ பொலிஸில் காணாமல் போன மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.


குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மத்ரசாவில் கற்கும் மாணவன் மசூட் அஸ்மட்டை காணவில்லை, தந்தை பொலிஸில் முறைப்பாடு மத்ரசாவில்  கற்கும் மாணவன் மசூட் அஸ்மட்டை  காணவில்லை, தந்தை  பொலிஸில் முறைப்பாடு Reviewed by Madawala News on May 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.