விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மனைவியை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் கைதுலுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயவில் நேற்று முன்தினம் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.


இதன்போது மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரான குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடம் மேற்கொள்ளப் பட்ட முதற்கட்ட விசாரணையின் போது முதலில் சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதாகவும் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்திய செய்தி
-------------------
நீராட சென்ற பெண் சடலமாக மீட்பு

லுணுகலையில் பெண்ணொருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை, ஜனதாபுர, தும்பபிட்டிய வத்தவில் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்று மாலை 3 மணியளவில் குளிப்பதற்கு தனது 11 வயது மகனுடன் கும்புக்கன் ஓயாவுக்குச் சென்று தனது மகனை குளிக்க வைத்த பின் மகனை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதன் பின்னர் சிறிது நேரத்தில் தனது தாயின் அலறல் சத்தம் கேட்டு 17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாய் குளித்த இடத்திற்கு சென்று பார்த்த போது தாய், தலையில் காயங்களுடன் தண்ணீரில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரிடம் தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாரிடம் மகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வரவழைக்கப்பட்டதாகவும் லுணுகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா
விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மனைவியை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் கைது விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மனைவியை கொன்றுவிட்டு தப்பியோடிய கணவன் கைது Reviewed by Madawala News on May 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.