ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைகிறோம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவிப்பு



ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியின் தீடீர் மரணத்திற்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று (27) நேரில் சென்று தனது இரங்கலைத் தெரிவித்தார்.



இதன்போது கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஈரான் நாட்டுக்கான இலங்கை தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, அங்கு விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.


மேலும் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய இழப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


அத்தோடு ஈரானும், இலங்கையும் நெடுங்காலமாக நட்போடு திகழ்கின்றன.


இலங்கையின் அபிவிருத்திக்கு கலாநிதி இப்ராஹிம் ரைசி பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார். விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ஈரான் தூதுவரிடம் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சத்திவேலும் அமைச்சருடன் சென்றிருந்தார்.

ஆ.ரமேஸ்.

ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைகிறோம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவிப்பு ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைகிறோம் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று தெரிவிப்பு Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.