சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு துறைசார் நிபுணர்களை கொண்டு வழிகாட்டல் செயலமர்வு. #பறகஹதெனியகடந்த வாரம் முடிவுற்ற க.பொ.த(சா/த) 2023 பரீட்சைக்கு தோற்றிய பறகஹதெனிய தேசிய பாடசாலையின் மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கட்டார் வாழ் பறகஹதெனிய சகோதரர்களின் அமைப்பான Qatar Paragahadeniya Society இன் அனுசரணையில் ஆளுமை மிக்க துறைசார் நிபுணர்களை கொண்டு நடாத்தப்பட்ட வாழ்நெறி வழிகாட்டல் செயலமர்வு கடந்த 18/05/2024, சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பறகஹதெனிய தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது.

பிரபல வளவாளர்களான

• Dr. Shibly Ahamed, Senior Lecturer, Southeastern University
• Mr. Rimzan Amanullah (SLEAS), ADE, Zonal Education Office - Puttalam
• Maj. Abdur Rahuman (SLTES), Lecturer, Sripada NCOE
• Mr. Safraz Khan (SLPS), Founder Principal, Galaha Model School
• Mr. Rafi Shariffdeen, Social Activist, The Young Friends Organization
• Mr. Mohamed Riswan (SLTS), Teacher, An Noor MMV - Panagamuwa

ஆகியோரின் பங்கேற்று வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கிய இச்செயலமர்வில் கணிசமான
மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

செயலமர்வு குறித்து கருத்துத் தெரிவித்த பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் சகோ.Fahim Amanullah “எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான விழிப்பூட்டல் மற்றும் வழிகாட்டல் செயலமர்வுகளை நடாத்த பழைய மாணவர் சங்கம் ஆயத்தமாக உள்ளது என்பதோடு, இனிவரும் காலங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவற்றின் உச்ச பட்ச பலனைப் பெற்றுக் கொள்வதில் கரிசனை காட்ட நமது சமூகம் முன் வர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளை விடுத்தார்..


அத்துடன் “செயலமர்வில் கலந்து கொண்டோர் மற்றும் கலந்து கொள்ளத் தவறியோருக்கான எதிர்கால திட்டமிடல்கள் குறித்த மேலதிக தெளிவுகளை பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்பதையும், பழைய மாணவர் சங்கத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் அத்தெளிவுகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற நற்செய்தியையும் பழைய மாணவர் சங்கம் சார்பில் அவர் முன் வைத்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “செயலமர்வுக்கு அனுசரணையை வழங்கிய Qatar Paragahadeniya Society இற்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எதிர்காலங்களிலும் இவ்வாறான அறப்பணிகளில் உதவ அவர்கள் முன்வரும் பட்சத்தில் அவர்களுடன் கரம் கோர்க்க பழைய மாணவர் சங்கம் சித்தமாயுள்ளது “
என்பதையும் தெரிவித்தார்.


-நமது நிருபர்.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு துறைசார் நிபுணர்களை கொண்டு வழிகாட்டல் செயலமர்வு. #பறகஹதெனிய சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு துறைசார் நிபுணர்களை கொண்டு வழிகாட்டல் செயலமர்வு. #பறகஹதெனிய Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.