ஏராளமான வசதி வாய்ப்புக்களை வழங்கும் “கோல்டன் வீசா"வை ரஜினிகாந்த்துக்கு வழங்கியது ஐக்கிய அரபு இராச்சியம்!ரஜினிக்கு “கோல்டன் வீசா” வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியம்!

அமீரகம் உட்பட மத்தியகிழக்கில் நகை விற்பனையில் கொடி கட்டிப்பறக்கும் பிரபலமான இந்திய LULU நிறுவனத்தின் தலைவர் #யூசூப் அலி மூலம் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) அரசாங்கத்திடம் இருந்து நடிகர் #ரஜினிகாந்துக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் DCT தலைமையகத்தில் நடந்த நிகழ்வொன்றில் வைத்து அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை பணிப்பாளர் முகமது கலீஃபா அல் முபாரக் நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசாவை வழங்கி வைத்தார்.

மேற்படி கோல்டன் வீசா மூலம்👇
* அவர் அங்கு சொத்துபத்துக்கள் வைத்திருக்கலாம்.
* அவர் எப்போது வேண்டுமானாலும் வீசா இன்றி அங்கு சென்று வரலாம்.
* அவர் 10 ஆண்டுகள் வரை அங்கு வசிக்கலாம்.
* இதன் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு பணியாளர்கள் கூட நிதியுதவி செய்யலாம்.

இதுபோன்று இன்னும் பல வசதி வாய்ப்புக்களையும் இந்த கோல்டன் வீசா மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகம் சென்ற நடிகர் ரஜினிகாந்த அபுதாபியில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்ட BAPS இந்து மந்திர் (கோவிலையும்) பார்வையிட்டார்.

- Almashoora Madawala News

(ஒரு தகவலுக்காக மட்டும் இது பதிவு செய்யப்படுகிறது)


#PrayForGaza
#காஸாவில் அழிக்கப்படும் மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

24.05.2024
#Gaza
#Iran #Israel #Latest #Update #AlmashooraLatestNews #AlmashooraBreakingNews #AlmashooraNallupathesam #KEEP_THE_FAITH
ஏராளமான வசதி வாய்ப்புக்களை வழங்கும் “கோல்டன் வீசா"வை ரஜினிகாந்த்துக்கு வழங்கியது ஐக்கிய அரபு இராச்சியம்! ஏராளமான வசதி வாய்ப்புக்களை வழங்கும் “கோல்டன் வீசா"வை ரஜினிகாந்த்துக்கு வழங்கியது ஐக்கிய அரபு இராச்சியம்! Reviewed by Madawala News on May 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.