மது அருந்தியதால் உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல் - அவரின் மனைவியே மதுவில் விஷத்தை கலந்து கொடுத்தது அம்பலம் #இலங்கைபெலியத்த கொஸ்கஹகொட பிரதேச நபர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி தனது வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது அவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


இந்நிலையில் தனது கணவனின் மது கோப்பையில் விஷம் கலந்து படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவியும் மனைவியின் சகோதரனும் கைது செய்யப் பட்டுள்ளனர்.


பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயும் (45 வயது), அவருக்கு ஆதரவாக இருந்த அவரது சகோதரரும் இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.


தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை ஊற்றி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
மது அருந்தியதால் உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல் - அவரின் மனைவியே மதுவில் விஷத்தை கலந்து கொடுத்தது அம்பலம் #இலங்கை மது அருந்தியதால் உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணையில் வெளியான தகவல் - அவரின் மனைவியே மதுவில் விஷத்தை கலந்து கொடுத்தது அம்பலம் #இலங்கை Reviewed by Madawala News on May 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.