மொடலிங் கற்பிக்கும் ஆசிரியர் குருநாகல் பிரதேசத்தில் கைது - மொடலிங் வகுப்பில் பங்கேற்ற 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.


பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த இளம் பெண் நேற்று (13) மாவத்தகமவில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில்  மொடலிங் பாடத்தை கற்க வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்றைய வகுப்பு முடிந்த நிலையில், பெய்த மழையின் காரணமாக அந்த இளம் பெண்ணும் மேலும் 3 பெண்களும் சிறிது நேரம் அங்கேயே தங்கியுள்ளனர்.


மொடலிங்  கற்பிக்கும்  ஆசிரியர், குறித்த பெண்களுடன் மது அருந்தியிருந்தமை விசாரணையின் போது தெரியவந்ததாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் 3 பெண்களும் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியதுடன் 19 வயது இளம் பெண்  கடும் போதையில் அங்கு நின்றுள்ளார்.


அப்போது தான்  பாலியல் பலாத்காரம்  நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதன்படி, சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில்  மொடலிங் கற்பிக்கும் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர் மாவத்தகம அறம்பொலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய திருமணமானவர்.


துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மாவத்தகம பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மொடலிங் கற்பிக்கும் ஆசிரியர் குருநாகல் பிரதேசத்தில் கைது - மொடலிங்  கற்பிக்கும்  ஆசிரியர் குருநாகல் பிரதேசத்தில் கைது - Reviewed by Madawala News on May 14, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.