வெசக் தினத்தில் கண்டி - கெலிஓய சிறிவிஜித மகா விகாரையில் ஒன்று கூடி உணவு உட்கொண்டு மகிழ்ந்த சிங்கள - முஸ்லிம் மக்கள்வெசக் வாரத்தை முன்னிட்டு கெலிஓய, நிவ் எல்பிடிய, சிறிவிஜித மகா விகாரையில் சிங்கள - முஸ்லிம் மக்களுக்ககான ஒரு ஒன்றுகூடல் வைபவும் விருந்துபசார நிகழ்வும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் பேராசிரியர் முவெடகம ஞாணனந்த தேரரின் தலைமையில் நடைபெற்றது. 


நிகழ்வில் பேராசிரியர் உரையாற்றுவதையும் இஸ்லாம் சமயத்தைப் பற்றிய ஒரு தெளிவுரையயை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மபாஸ் சனூன் வழங்குவதையும் கண்டி மாவட்டப் பாராளமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார உட்பட கலந்து கொண்டோர் மதிய போசனம் உட்கொள்ளுவதையும் கலந்து கொண்ட அனைவரும் நிகழ்ச்சியின் இறுதியில் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் படங்களில் காணலாம்.

 இதன்போது உரையாற்றிய  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மபாஸ் சனூன்..

இஸ்லாம் சமயம் பல்லினச் சூழலில் கலந்து வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றது. நபி (ஸல்) அவர்களும் பல்லினச் சூழலுக்கு மத்தியில் முன்மாதியாகவே வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் அதிகமாக யூதர்களுடனே கொடுக்கல் வாங்கல் செய்துள்ளார்கள் என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மபாஸ் சனூன் தெரிவித்தார்.

அல்குர்ஆன் முஸ்லிம்களின் சமய நூல் என்றே அனைவரும் அறிகின்றனர். என்றாலும் அதில் மூன்றில் இரண்டு பகுதியில் யூதர்களின் பிரதான போதகரான மோஸஸ் பற்றியே சொல்லப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜீவனை வாழவைப்பவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்று போதனை செய்துள்ளார்.


இலங்கை முஸ்லிம்களின் தாய் வழி இறுதியில் சிங்கள சமுகத்தைச் சென்றே சேருகின்றது. அவ்வகையில் இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகளாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே கண்டி மன்னன் தளதா பெரஹராவின் போது பொருட்களை கொண்டு வருகின்ற - கொண்டு செல்லுகின்ற பொறுப்பை முஸ்லிம்களிடம் ஒப்படைத்து இருந்தான். அன்றைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு பள்ளிவாசலை அமைப்பதற்கு விகார – தேவால சட்டத்தின் கீழ் இருந்த ஒரு காணியை கண்டி அரசன் கொடுத்து உதவினான். அந்தப் பள்ளிவாயலின் மாதாந்த செலவுகளுக்காக நிதி வழங்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு மாத்திரம் இருக்கவில்லை. சிங்களப் பிரதானிகளின் அனுமதியுடன் அது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்றதாக அரச ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அன்று சிங்களவர்களும் முஸ்லிம்களும் சிங்களம், முஸ்லிம் என்ற பேதமில்லாத அந்தளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.


தற்போதைய சூழ்நிலையில் ஏனைய இனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களைப் பற்றி உருவாக்கப்பட்டதாக இருக்கின்ற சித்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியது. சர்வதேச ஊடகங்களும் சர்வதேச அரசியலுமே இதற்கான பின்புலக் காரணங்களாக இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் கனிய எண்ணை வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே முஸ்லிம்களை தவறாகச் சித்தரிக்கின்ற கலாசாரம் உருவானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்டப் பாராளமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, நிவ் எல்பிடிய ஜூம்மப் பள்ளிவாயலின் பேஷ் இமாம் ஏ. எம். பாரிஸ், சமூக சேவகர் ஆர். எம். பாஸில் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

      


வெசக் தினத்தில் கண்டி - கெலிஓய சிறிவிஜித மகா விகாரையில் ஒன்று கூடி உணவு உட்கொண்டு மகிழ்ந்த சிங்கள - முஸ்லிம் மக்கள் வெசக் தினத்தில் கண்டி -  கெலிஓய சிறிவிஜித மகா விகாரையில் ஒன்று கூடி உணவு உட்கொண்டு மகிழ்ந்த சிங்கள - முஸ்லிம் மக்கள் Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.