அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டன.அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்துகொண்டு அவர் இதனை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்களும், வர்த்தகர்களும் பெரும் முதலாளிகள் மற்றும் பெரும் தொழில்முனைவோர் போன்று நடந்து கொள்கின்றனர்.

இலங்கையில் சமூகப் பாதாள உலகம் தவிர, அரசியல் பாதாள உலகமும் இருப்பதாக கூறியதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான் விசாரிக்கப்பட்டேன். ஆனால் எனது அரசியல் கணிப்பு படி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து தேர்தல் முடிவுகளை மாற்ற மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் உழைத்தனர்.


மேலும், ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத பதினைந்து பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தகவல்கள் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காததால், அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி, மற்றவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதாலும், வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாமையாலும் நாட்டுக்கான அபிவிருத்தி உதவிகள் முற்றாக நிறுத்தப்படும்.மீண்டும் அதே நிலைமையை நாடு எதிர்கொள்ள நேரிடும்.

இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மேலும் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டன. அரச வங்கிகளில் பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அரசியல்வாதிகளின் பெயர்கள் மறைக்கப்பட்டன. Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.