ஓ எல் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயமாகினர்.நேற்று (14) கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் கினிகத்தேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


அதில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கினிகத்தேன, அக்ரஓயா மற்றும் நாவலப்பிட்டி நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பிகள் என தெரியவந்துள்ளது.


பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவர்கள் பார்த்துள்ளனர்.


காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓ எல் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயமாகினர். ஓ எல் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சென்ற  இரு பாடசாலை மாணவிகள் மாயமாகினர். Reviewed by Madawala News on May 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.