புறப்பட தயாராக இருந்த இந்திய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்பட இருந்தது. இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.

உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்புத் துறையினர் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புறப்பட தயாராக இருந்த இந்திய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். புறப்பட தயாராக இருந்த இந்திய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் -  பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். Reviewed by Madawala News on May 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.