ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலக பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடல்இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக Water Forum உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து உரையாடினார்.

இதன் போது உலகின் அதிவேக இணைய சேவையான Starlink ஐ இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பில் குறித்து கலந்துரையாடியதுடன், இலங்கையை உலகளாவிய Starlink வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்பச் செயல்முறையை விரைவாகக் கண்காணிப்பதற்கும் உறுதியளித்தார் என தெரிவிக்க படுகிறது.

இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதியும் எலோனும் கலந்துரையாடினர்.

Starlink தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நெட்வொர்க் ஆகும்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலக பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலக பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடல் Reviewed by Madawala News on May 19, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.