பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸாரால் கைது.பிங்கிரிய பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.


பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நடத்தும் 50 வயதுடைய பெண் ஒருவர் சிற்றுண்டிச்சாலையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட மனுவின் பிரகாரம், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, பிங்கிரிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபரான சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸாரால் கைது. பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on May 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.