புறக்கோட்டை பஸ் உள்ளே வெளிநாட்டுப் பெண்னின் கைப்பையை திருடிச்சென்ற நபர் களனி பிரதேசத்தில் பொலிஸாரால் கைது



 புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில், வெளிநாட்டுப் பெண் ஒருவரின் பயணப்பொதியினைத் திருடிச் சென்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. 

 

குறித்த நபர் களனி - பெத்தியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

தொடருந்துப் போக்குவரத்துப் பாதிப்பு காரணமாக, பிரித்தானியாவைச் சேர்ந்த குறித்த பெண் பதுளை - எல்ல நோக்கி தனியார் பேருந்தில் செல்லத் திட்டமிட்டிருந்தார். 

 

இதன்போது, அவரது பயணப்பொதியை சந்தேக நபர் திருடிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புறக்கோட்டை பஸ் உள்ளே வெளிநாட்டுப் பெண்னின் கைப்பையை திருடிச்சென்ற நபர் களனி பிரதேசத்தில் பொலிஸாரால் கைது புறக்கோட்டை பஸ் உள்ளே வெளிநாட்டுப் பெண்னின் கைப்பையை திருடிச்சென்ற நபர் களனி பிரதேசத்தில் பொலிஸாரால் கைது Reviewed by Madawala News on May 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.