மோட்டார் சைக்கிள்களை திருடி உடனடியாக உதிரிபாகங்களாகவும் பிரித்து விற்பனை செய்து விடுகின்றார்கள் - உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்மோட்டார் சைக்கிள்களை திருடி உடனடியாக உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்தும் விடுகின்றார்கள் - உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,


" யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் கடந்த சில மாதங்களில் 32 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. அவை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


விசாரணைகளின் போது , திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை உடனேயே உதிரிபாகங்களாக பிரித்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.


அதானல் மோட்டார் சைக்கிள்களை மீட்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். " என தெரிவித்துள்ளனர் .


மேலும் , மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, அவற்றுக்கு "ஹாண்டில் லொக்" போட்டு செல்லுமாறும் , மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எம். றொசாந்த்

மோட்டார் சைக்கிள்களை திருடி உடனடியாக உதிரிபாகங்களாகவும் பிரித்து விற்பனை செய்து விடுகின்றார்கள் - உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் மோட்டார் சைக்கிள்களை திருடி உடனடியாக உதிரிபாகங்களாகவும் பிரித்து விற்பனை செய்து விடுகின்றார்கள் - உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.