இ.போ.ச பஸ்ஸின் டயர் கழன்று சென்று சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம்.ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் நுகேகொட ஹைலெவல் வீதியின் ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் டயர் ஒன்று கழன்று வீதியில் சென்றுள்ளது.

கழன்ற சக்கரம் எதிர்திசையில் வீதியைக் கடந்து உடற்பயிற்சி உபகரணங்களை விற்கும் கடையின் மீது மோதியதால் அதன் சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து தொலைவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக ஹோமாகம லங்காம டிப்போவில் இருந்து கிருலப்பனை நோக்கி ஹைலெவல் வீதியில் பஸ் பயணித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில் பாடசாலை விடுமுறை என்றாலும், மக்கள் செறிந்து வாழும் நுகேகொட நகருக்கு அருகாமையில் இவ்வாறான விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வீதியில் செல்பவர்கள் அல்லது பயணிப்போர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இ.போ.ச பஸ்ஸின் டயர் கழன்று சென்று சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம். இ.போ.ச பஸ்ஸின் டயர் கழன்று சென்று சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம். Reviewed by Madawala News on May 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.