மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றது - நாமல்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு சக்திகள் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

“அரசாங்கத்துக்குள் இருந்துதான் சதி உருவானது.

சர்வதேச சக்திகளும், பயங்கரவாத அமைப்புகளும் அரசாங்கத்தை கவிழ்க்க செயற்பட்டன.

அதன் பலனாகவே நல்லாட்சி அரசாங்கம் உருவானது.

ஆனால் மஹிந்த ராஜபக்ச ஒப்படைத்த அரசாங்கத்தை கோத்தபாய ராஜபக்ச கைப்பற்றவில்லை - அவர் ஒரு தோல்வியுற்ற அரசாங்கத்தையே பொறுப்பெ டுத்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தொகுதி மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தலாவ நகரில் ஆரம்பமானது.

“ரஜரட்டையில் 
 இருந்து போராட்டத்தை தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இத்தொகுதி மாநாட்டில் பொது மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற போதும் அவர் மாநாட்டில் உரையாற்றாவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றது - நாமல் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்க்க நாட்டில் பாரிய சதி இடம்பெற்றது - நாமல் Reviewed by Madawala News on May 27, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.