ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்பு ; நான்கு பெண்கள் கைது!கந்தளாய் யூசுப்

ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்ற, புத்தளம் பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்கள் கந்தளாயில் வைத்து,
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி நேற்று (17) அதிகாலை புறப்பட்ட தனியார் பேருந்தில், பயணித்த பெண் ஒருவரின் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது .

இது தொடர்பாக, குறித்த பெண்ணால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டுக்கு இணங்க,
பொலிஸார் தீவிர தேடுதலை மேற்கொண்டு, நான்கு பெண்களை தங்க நகையுடன் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நால்வரும், தம்புள்ளையில் இருந்து பேருந்தில் ஏறியவர்கள் என்றும் இவர்கள் புத்தள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையின் போது தெரிய வந்திருக்கின்றது.

இதில் ஒரு பெண், தங்க நகைகளை தனது கை பைக்குள் வைத்திருந்தவரின் அருகில் அமர்ந்து, இவரது நித்திரையை சாதகமாக பயன்படுத்தி, கைப்பையை திருடிக் கொண்டு, கந்தளாய் பகுதியில்
இறங்கியிருக்கின்றார். இவரோடு ஏனைய மூன்று பெண்களும் இறங்கி இருக்கின்றார்கள்.

இதன் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது, நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன், இவர்களிடமிருந்து குறித்த தங்க நகைகளும் கைப்பட்டதோடு, கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் 21, 23, 30 மற்றும் 40 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாவது, குறித்த பெண்கள் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்து, இவ்வாறான திருட்டுகளில் ஈடுபடுவதை தங்களது தொழிலாக செய்து வருவதாகவும் கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்பு ; நான்கு பெண்கள் கைது! ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்பு ; நான்கு பெண்கள் கைது! Reviewed by Madawala News on May 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.