கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்று யாரும் பயப்பட வேண்டாம் ; பிரபல மருத்துவ நிபுணர்கள் அறிவிப்புகொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், பிரபல மருத்துவ நிபுணர்கள் இது பற்றி பயப்படத் தேவையில்லையெனக் கூறியுள்ளனர்.பிரிட்டனைச் சேர்ந்த, 'ஆஸ்ட்ரா ஜெனேகா' நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியால் பலர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக 51 வழக்குகள் லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.


இதற்கு இந்நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களுடைய கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவாக இரத்தம் உறைதல் அல்லது இரத்த தட்டணுக்கள் குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிறுவனமானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது.


'சீரம் இந்தியா' நிறுவனமானது ஆஸ்ட்ரா ஜெனேகாவுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.இது குறித்து, பிரபல தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ராமன் கங்காகேதார், 'விற்றமின் பி12' மருந்து சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தலாம் என்பதால், வைத்தியசாலையில் வைத்து தான் வழங்கப்பட்டதெனக் கூறினார்.கொரோனா தடுப்பூசியால், 10 இலட்சம் பேரில் ஏழு அல்லது எட்டு பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.முதல் டோஸ் எடுத்துக்கொண்டபோது, பக்கவிளைவுக்கான சாத்தியம் சற்று அதிகமாக இருக்கலாம். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு, அதற்கான சாத்தியம் மேலும் குறைகிறது.

பூஸ்டர் எனப்படும் மூன்றாவது டோஸ் எடுத்துக்கொண்டால், பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைகிறது.மேலும் பக்கவிளைவுகள் என்றால் தடுப்பூசி போட்ட பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். அதற்கு மேல் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் மக்கள் பயப்படத் தேவையில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்று யாரும் பயப்பட வேண்டாம் ; பிரபல மருத்துவ நிபுணர்கள் அறிவிப்பு கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்று யாரும் பயப்பட வேண்டாம் ; பிரபல மருத்துவ நிபுணர்கள் அறிவிப்பு Reviewed by Madawala News on May 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.