வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியோடி விபத்துக்குள்ளான கார் - கணவன் மனைவிக்கு காயங்கள் இல்லை - மகள் உயிரிழப்புகந்தளாய் யூசுப்
கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை – ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.


இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியோடி விபத்துக்குள்ளான கார் - கணவன் மனைவிக்கு காயங்கள் இல்லை - மகள் உயிரிழப்பு வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியோடி விபத்துக்குள்ளான கார் - கணவன் மனைவிக்கு காயங்கள் இல்லை - மகள் உயிரிழப்பு Reviewed by Madawala News on May 23, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.