நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எனது பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது - ஜனாதிபதிநாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இலங்கை காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில்,


"பொருளாதாரத்தை மீட்பதே ஜனாதிபதி என்ற எனது பணி. அதாவது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது. அந்த பாத்திரம் தற்போது முடிவுக்கு வருகிறது. இனி அடுத்த கட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். இனி இந்த பொருளாதார மாதிரியை தொடர முடியாது. இலங்கை. நிச்சயமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைப்படுகிறது, அதில் ஒன்று காற்றுமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை ஆற்றல்.


அந்த மாகாணத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் அந்த ஆற்றலை உருவாக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஹம்பாந்தோட்டை சூரிய சக்தி பற்றிய பேச்சுக்கள்  இப்போதுதான் ஆரம்பித்துள்ளது.


நாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தாலும், இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் வெளியிட்ட தொலைநோக்கு அறிக்கையின்படி, இந்தியாவுக்கு எரிசக்தி விற்பனை செய்வதையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது.


இப்போது அதற்கான கிரிட் இணைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளோம். அதானி குழுமத்துடனான முதல் ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எனது பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது - ஜனாதிபதி  நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எனது  பணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது - ஜனாதிபதி Reviewed by Madawala News on May 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.