ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று பொலிஸாரால் சுற்றிவளைப்பு.ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று வெள்ளவாய பிரதேசத்தில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப் பட்டுள்ளது.


வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கரடகொல்ல, அம்பதென்ன பிரதேசத்தில் பாரியளவிலான கஞ்சா நடவடிக்கையை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருபத்தெட்டாயிரத்து நானூறு கஞ்சா மரங்கள் பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா மரங்கள் அனைத்தும் எரித்து
நாசமாக்க பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று பொலிஸாரால் சுற்றிவளைப்பு. ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று பொலிஸாரால் சுற்றிவளைப்பு. Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.