வெசாக் போயா தின ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட மாட்டார்.வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சபையின் பீடாதிபதிகள் வெசாக் போயா தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.


எனினும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் உள்ளடக்கப்படவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர்
வெசாக் போயா தின ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட மாட்டார். வெசாக் போயா தின ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட மாட்டார். Reviewed by Madawala News on May 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.