திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்புஅரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


'ஊழலை ஒழிப்போம்' என்பதை அரசியல் கோஷமாக பயன்படுத்துவதைக் கைவிட்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று (15) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் இதன்மூலம் தெற்காசியாவில் புதிய சட்ட முறைமை செயற்படுத்தும் ஒரே நாடு இலங்கை எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழலை ஒழிக்க பல புரட்சிகரமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு  திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Madawala News on May 15, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.