தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில் அல்-ஹம்றா மாணவன் பதவியுயர்வு.பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து பாடசாலை மட்டத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள ஆளுமையான தலைவர்களை உருவாக்கும் நோக்கில் உருவான பாடசாலையின் தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில் கமு/அக்/அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவன் அப்துல் நிஸார் ஸராபத் இஸ்னி பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக சார்ஜன்ட் நிலையில் இருந்து (CQMS) Company Quarter Master Sergeant நிலைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்நிகழ்வு கடந்த 16.05.2024 ஆந் திகதி அம்பாறை 17வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த மாணவனை வழிப்படுத்திய பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம்,உடற்கல்வி பாட சிரேஷ்ட ஆசிரியரும் பாடசாலை பொலிஸ் கெடற் பிரிவின் பொறுப்பாசிரியருமான பிளட்டூன் கொமாண்டர் (PLATOON COMMANDER) லெப்டினன்ட் ஏ.எம்.எம். கியாஸ்,தொடர் பயிற்சியினை வழங்கிய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸ் கெடற் பயிற்றுவிப்பாளர் எம்.சுதர்சன் (PC-84941), பாடசாலையின் கெடற் பிரிவுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்கும் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.நௌஸாத்,விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் ஸஹி ஆகியோருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

~ரமீஸ் எம் லெவ்வை

தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில் அல்-ஹம்றா மாணவன் பதவியுயர்வு. தேசிய மாணவச் சிப்பாய் படையணியில் ஒலுவில் அல்-ஹம்றா மாணவன் பதவியுயர்வு. Reviewed by Madawala News on May 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.