நாளைய தினத்தை இந்தியா நாடு முழுதும் துக்க தினமாக அறிவித்தது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி உயிரிழந்தமையையடுத்து நாளை (மே 21) ஒருநாள் துக்க நாளாக அனுஷ்டிக்க, இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி, வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை (மே 21 ஆம் திகதி) இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும். அரசு சார்பில் நாளை எந்த கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது. என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாளைய தினத்தை இந்தியா நாடு முழுதும் துக்க தினமாக அறிவித்தது.  நாளைய தினத்தை இந்தியா நாடு முழுதும் துக்க தினமாக அறிவித்தது. Reviewed by Madawala News on May 20, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.