திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறி நிறைவில் சான்றிதழ் வழங்கப்பட்டதுஇர்ஷாத் இமாமுதீன்

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (25. 05. 2024 ) வட்டதெனியவில் அமைந்துள்ள கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியில் இனிதே நடைபெற்றது.

கதீஜதுல் குப்பரா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பாரூக் (அல் அஷ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

லைப்பொண்ட் நிறுவனத்தின் வளவாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்கள் இந்நிகழ்வில் விசேட உரை நிகழ்த்திய அதேவேளை லைப்பொண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரியின் செயலாளர் சாஜஹான் உடையார் ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள்,பெற்றோர்கள்,கல்லூரியின் விரிவுரையாளர்கள்,பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். .

லைப்பாண்ட் நிறுவனம் இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமாகும். உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறி நிறைவில் சான்றிதழ் வழங்கப்பட்டது திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறி நிறைவில் சான்றிதழ் வழங்கப்பட்டது Reviewed by Madawala News on May 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.