மின்சார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த மாணவன் மொஹமட் சஹ்ரான் உயிரிழப்புபுத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்குள்ளாகி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி (hair dryer) மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.


இவரது ஜனாஸா வியாழக்கிழமை இரவு புத்தளம் பகா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

மின்சார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த மாணவன் மொஹமட் சஹ்ரான் உயிரிழப்பு மின்சார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த மாணவன்  மொஹமட் சஹ்ரான் உயிரிழப்பு Reviewed by Madawala News on May 30, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.