20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் புத்தளம் - கற்பிட்டியில் வீடொன்றில் ஒருவர் கைது, புத்தளம் - கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நேற்று (15) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தனியார் மருந்தகமொன்றில் கடமைபுரிந்து வந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனை செய்த போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உறங்கும் அறையில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.


இதன்போது 58 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 7000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த போதை மாத்திரைகள் கொழும்பில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மாத்திரையொன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


ரஸீன் ரஸ்மின்

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் புத்தளம் - கற்பிட்டியில் வீடொன்றில் ஒருவர் கைது, 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் புத்தளம் - கற்பிட்டியில் வீடொன்றில் ஒருவர் கைது, Reviewed by Madawala News on May 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.