தனது தேநீர் கடைக்கு பின்னால் தகாத தொழிலை நடத்திவந்த உரிமையாளரும் இரு பெண்களும் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது. #தம்பல காமம்தம்பலகாமம்,கல்மெடியாவில் விபசார விடுதி முற்றுகை இரு பெண்கள் உட்பட உரிமையாளரும் கைது

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் (02)மாலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது சிறிய தேநீர் கடை நடாத்தி வந்த உரிமையாளர் தனது கடைக்கு பின்னால் உள்ள வீட்டில் விபசார விடுதியை நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றி வலைப்பின் போது கண்டி,இரத்தினபுரி பகுதியை சேர்ந்த வயது (44,45) இரு பெண்களும் வீட்டு உரிமையாளரும் (வயது 38) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நீண்ட காலமாக இவ் விபச்சார விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட உரிமையாளரையும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (03) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist


தனது தேநீர் கடைக்கு பின்னால் தகாத தொழிலை நடத்திவந்த உரிமையாளரும் இரு பெண்களும் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது. #தம்பல காமம் தனது தேநீர் கடைக்கு பின்னால் தகாத தொழிலை நடத்திவந்த உரிமையாளரும் இரு பெண்களும் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது. #தம்பல காமம் Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.