நாங்கள் அமெரிக்காவிடம் தோற்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை - எமக்கு இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் தான் தோற்றோம் ; தொடரை தோற்ற பங்களாதேஷ் அணி கேப்டன் வேதனையுடன் தெரிவிப்புபங்களாதேஷ் அணி தற்போது அமெரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.


இந்த நிலையில் அந்த அணி முதல் இரண்டு போட்டிகளிலும் அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து தொடரை இழந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேசியிருக்கிறார்.


டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, இந்த முறை டி20 உலகக் கோப்பை நடக்கும் இருக்கும் ஒரு நாடான அமெரிக்காவிற்கு பங்களாதேஷ் டி20 தொடர் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.


இப்படியான நிலையில் தான் அந்த அணி முதல் இரண்டு டி20 போட்டிகளையும் தோற்று தொடரை இழந்தது.

முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து தோல்வி அடைந்த பங்களாதேஷ் அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது.


அமெரிக்க சூழ்நிலைகளுக்கு பழகிக் கொள்வதற்கு தேவையான அளவு பயிற்சி வசதிகள் தங்களுக்கு செய்து தரப்படவில்லை என ஷாகிப் அல் ஹசன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நிச்சயமாக இந்த தோல்வி மிக ஏமாற்றம் அளிக்கிறது நாங்கள் எதிர்பார்க்கவே கிடையாது. ஆனால் அமெரிக்க அணி விளையாடிய விதத்திற்கான பெருமையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.


இரண்டு போட்டிகளில் தோல்வி அடைவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக எந்த ஒரு போட்டியிலும் அணியாக தோல்வி அடைவது ஏமாற்றம் தரக்கூடியது. இது டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது.

இது ஒரு குழு விளையாட்டு எனவே தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் இதற்கு பொறுப்பாக்க முடியாது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பெரிய அணிகள் சிறிய அணிகள் என்று எதுவும் கிடையாது. இந்த காரணத்தினால் தான் இந்த வடிவத்தில் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும்.

கடந்த இரண்டு போட்டிகளிலும் அமெரிக்க அணி இதைச் செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு பயிற்சியாக இந்த தொடரை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நிறைய பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி செஷன்கள் கிடைத்திருக்க வேண்டும். மேலும் எங்களுக்கு கிடைக்காத கூடுதல் வசதிகள் இங்கு கிடைக்க வேண்டும். எங்களுக்கு இங்கு ஒருநாள் மட்டுமே பயிற்சிக்கு இடம் இருந்தது. நடுவில் ஒருநாள் மழை பெய்ததால் எதுவும் நடக்கவில்லை. மேலும் இங்கு நான்கு மைதானங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு பயிற்சி செய்ய மூன்று ஆடுகளங்கள் மட்டுமே கிடைத்தது. இது பயிற்சிக்கு சிறந்த ஒன்றாக நான் நினைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

நன்றி : Swag Sports
நாங்கள் அமெரிக்காவிடம் தோற்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை - எமக்கு இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் தான் தோற்றோம் ; தொடரை தோற்ற பங்களாதேஷ் அணி கேப்டன் வேதனையுடன் தெரிவிப்பு நாங்கள் அமெரிக்காவிடம் தோற்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை - எமக்கு இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் தான் தோற்றோம் ; தொடரை தோற்ற பங்களாதேஷ் அணி கேப்டன் வேதனையுடன் தெரிவிப்பு Reviewed by Madawala News on May 24, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.